×

வாகனங்களால் விழி பிதுங்கும் பரனூர் சுங்கச்சாவடி தினசரி குவியும் தென்மாவட்ட மக்களால் இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை

* கடும் போக்குவரத்து நெரிசல்
* வெளியூர் பயணிகளுக்கு பரிசோதனை?
* அச்சத்தில் சுகாதார துறையினர்

சென்னை: இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் தென், வட, மேற்கு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையில் குவிந்து வருவதால் இயல்பு  வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி வருகிறது. அதே சமயம் லட்சக்கணக்கில் குவியும் மக்களால் சுகாதாரத்துறையினர் நோய் தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்ற அச்சத்தில் ஆலோசனை  மேல் ஆலோசனை செய்து வருகின்றனர்.சொந்த ஊரில் கொரோனா காரணமாக அச்சத்தில் தங்கியிருந்த மக்கள். இபாஸ் ரத்து காரணமாக வேலைக்கு செல்லவும் பல்வேறு அலுவலக  பணிகளை மேற்கொள்ளவும், வியாபாரத்துக்காகவும் கடந்த 2 நாட்களாக சென்னையை நோக்கி கார், பைக் உள்பட பல்வேறு வாகனங்களில் திரும்பி  வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.

இதனால்செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் விழி பிதுங்கி போய் உள்ளனர். கடந்த 2 நாட்களில் கார், வேன், பைக், சரக்கு வாகனங்கள்  உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் நுழைந்துள்ளன. இதனால் மறைமலைநகர் நகர் முதல் கிண்டி வரை கடும்  போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக  நேற்று காலை சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்களின்  எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. கொரோனா காரணமாக சென்னையில் முடங்கி கிடந்தவர்கள், தற்போதைய ஊரடங்கு தளர்வு, இபாஸ் ரத்து ஆகியவற்றால் பலர் உறவினர்களை  பார்க்க கடந்த 5 மாதங்களுக்கு பின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சிலர் சென்னையே வேண்டாம் என்று சொந்த ஊரில் செட்டிலாக சென்றனர்.

சிலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு ஆகிய மலைவாசஸ்தலங்களுக்கு இ பாஸ் பெற்று செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால்  சென்னை நகரில் மேலும் கொரோனா பரவலை தடுக்க, வெளியூரில் வந்தவர்களுக்கு முறையான பரிசோதித்து, அவர்களுக்கு தொற்று உள்ளதா என கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இரண்டு நாளில் லட்சக்கணக்கானவர்கள்  சென்னையில் குவிந்ததால் சுகாதாரத் துறையினர் அச்சத்தில் உள்ளனர்.

Tags : toll plaza ,Chennai ,Paranur ,return ,Southern District ,districts , Paranur, toll plaza ,closed ,vehicles
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...