×

கர்நாடகா பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி: சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடகா மாநில பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகா பா.ஜ. முதல்வர் எடியூரப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இவரது அமைச்சரவையில் பஞ்சாய்த்து ராஜ் அமைச்சராக இருப்பவர் ஈஸ்வரப்பா ஆவார். நேற்று இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ப்பட்டது. எனவே அவருக்கு கொரோனா இருப்பது தற்போது பரிகோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்கா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சருடன் தொடர்பில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈஸ்வரப்பா பூரண குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்திப்பாக தெரிவித்துள்ளார்.


Tags : Eeswarappa ,BJP ,Karnataka ,hospital , Karnataka BJP minister, Eeswarappa confirmed,corona infection, private hospital, treatment
× RELATED எடியூரப்பா மீது போக்சோ வழக்கில்...