×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: முற்றிலும் எரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு

விசாகப்பட்டினம்:  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீரென காரில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதாவது காரில் பயணம் செய்தவர்கள் விமான நிலையத்திலிருந்து சிம்மாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கோபாலபட்டினம் என்ற இடத்தில் காரை சிறிது நேரம் நிறுத்தி விட்டு காரில் பயணித்தவர்கள் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.  அப்போது காரில் திடீரென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. ஏற்கனவே காரிலிருந்து 4 பேரும் இறங்கியதால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டன.

பின்னர், தீயணைப்பு துறையினருக்கு தகவலானது அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags : Visakhapatnam ,car fire ,Andhra Pradesh ,panic , Andhra Pradesh Visakhapatnam: A car fire broke out in Visakhapatnam on Friday, causing panic
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...