×

ஊரடங்கு நிவாரண தொகை இருந்தும் சென்னையில் 16,000 மாற்றுத்திறனாளிகளின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை: அதிகாரிகளை தொடர்பு கொண்டால் உதவி தொகை; மாநகராட்சி தகவல்

சென்னை: ஊரடங்கு நிவாரண தொகை வழங்க செய்யப்பட்ட ஆய்வில் 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள வைத்துள்ள 13.35 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை வழங்க ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலருக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அனைவருக்கும் உதவித் தொகை வழங்ககோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையர் மேகநாத ரெட்டியை  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஜெயசந்திரன், சுரேந்திரன், கே.பி.பாபு, சென்னை மண்டல மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி அலுவலர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் 46 ஆயிரத்து 487 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 465 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 20 ஆயிரத்து 503 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டுள்ளவர்களுக்கு அடுத்த வார இறுதிக்குள் நிவாரண தொகை வழங்கப்படும். அடையாளம் காணமுடியாத 15 ஆயிரம் 992 பேரை கண்டறியும் பணிகள் நடைபெற்றுவருகிறது. நிவாரணம் கிடைக்காதவர்கள் பட்டியல் அளித்தால் அல்லது இலவச அழைப்பு எண் 18004250111 ல் தெரிவித்தால் அவர்களை பரிசீலித்து உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படும்.

Tags : Chennai , Curfew, relief amount, Chennai, 16,000 disabled, address, official contact, allowance; Corporation Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...