×

கொரோனா சிகிச்சை அளிக்க திருமண மண்டபம் மருத்துவமனையாக மாற்றம்

திருப்பூர்:  திருப்பூர் காலேஜ் ரோடு சேவா சமிதி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம்அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 9 தாலுகா பகுதிகளில் சிறப்பு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு 2,800 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.

மேலும் திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சேவா சமிதி திருமண மண்டபத்தில் 100 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சைஅளிக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பாபு, சேவா சமிதி சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags : wedding hall ,hospital ,corona Transformation , treat ,corona, wedding, hospital
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...