×

2.46 கோடி பேருக்கு பாதிப்பு; 8.34 லட்சம் பேர் பலி;1.70 கோடி பேர் குணமடைந்தனர் : உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா முன்னிலை!!

சென்னை : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 46 லட்சத்து 23 ஆயிரத்து 158 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 66 லட்சத்து 93 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 396 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 34 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 84 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 33,47,927
பிரேசில் - 29,47,250
இந்தியா - 25,23,772
ரஷியா - 7,92,561
தென் ஆப்ரிக்கா - 5,31,338
பெரு - 4,21,877
கொலம்பியா - 4,17,793
மெக்சிகோ - 3,96,758

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 1,84,778
பிரேசில் - 1,18,726
மெக்சிகோ - 62,076
இந்தியா - 60,472
இங்கிலாந்து - 41,477
இத்தாலி - 35,463
பிரான்ஸ் - 30,576
ஸ்பெயின் - 28,996
பெரு - 28,124
ஈரான் - 21,137

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 60,46,064
பிரேசில் - 37,64,493
இந்தியா -  33,10,235    
ரஷியா - 9,75,576
தென் ஆப்பிரிக்கா - 6,18,286
பெரு - 6,13,378
கொலம்பியா - 5,82,022
மெக்சிகோ - 5,73,888
ஸ்பெயின் - 4,51,792
சிலி - 4,04,102

Tags : Brazil ,India ,US ,corona outbreak , 2.46 crore people affected; 8.34 lakh killed, 1.70 crore cured: US, Brazil, India lead in global corona outbreak
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...