×

மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து; தேர்ச்சி அறிவிக்கப்பட்டது : முதல்வர் பழனிசாமி விளக்கம்!!

கடலூர் : இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி கூறியதாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டிற்கு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளன. கடலூர் சிப்காட் நிறுவனங்கள் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, என்றார்.

இதைத்தொடர்ந்து இ - பாஸ் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி, விண்ணப்பித்த அனைவருக்கும் இ - பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இ - பாஸ் வழங்கப்பட்டால் தான் நோய் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்  யார் எங்கு செல்கிறார்கள் என்பதை உடனடியாக கண்டறிய முடியும். என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரியர் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், மாணவர்கள் நலன் கருதி தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசியதாவது, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஏற்கனவே ஜூலை 8ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. என்றார்.

Tags : Palanisamy ,Cancellation , Cancellation of exams as a solution to students' stress; Passing announced: Chief Minister Palanisamy's explanation !!
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...