×

திருவட்டார் அருகே அடகு கடை நடத்தி ரூ.5 கோடி மோசடி : பெண் காவலரின் கணவன் தலைமறைவானதால் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் காவலரின் கணவர் நகை அடகு கடை நடத்தி 5 கோடி ரூபாய் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக,கேரள எல்லையான மத்தபாளையத்தை சேர்ந்த அஞ்சு என்பவர் குமரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில் பலுகள் உள்ளிட்ட இடங்களில் நகை அங்கு கடையை அவரது கணவர் பிங்கோ ஆல்பின் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் கடைகளை மூடி விட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 இந்நிலையில் பிங்கோ ஆல்பின் வீட்டிற்கு வந்துள்ளதாக அறிந்த அவர்கள் பெண் காவலரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லையை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் 5 கோடி ரூபாய் அளவிற்கு நகைகளை அடகு வைத்து ஏமாந்துள்ளனர்.

இதனையடுத்து  பிங்கோ ஆல்பின் மனைவி காவல் துறையில் பணிபுரிந்து வருவதால், வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பிங்கோ ஆல்பினிடமிருந்து நகைகளை உடனடியாக மீட்டு தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : pawn shop ,house ,public ,loan broker ,Thiruvattar ,police officer ,jewelers ,kanniyakumari , kanniyakumari,Gold loan Broker,jewelleries
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்