×

கொரோனா சோதனை விவரம் ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஆய்வகங்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா சோதனை விவரங்கள் 24 மணி நேரத்தில் ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் ஆய்வகங்களுக்கு ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கொரோனா பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் இணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:

பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் வழிமுறைகளை வகுத்துள்ளது. பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், அவரின் முழு முகவரி, வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையினை துல்லியமான முறையில் மேற்கொண்டு, முடிவினை 24 மணிநேரத்தில் தெரிவிக்க வேண்டும். பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அனைத்து. சென்னையில் நாள்தோறும் 12,000க்கும் மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 9,64,638 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் ஐசிஎம்ஆர் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : ICMR ,Corona ,laboratories ,Commissioner , Corona, test specification, ICMR website, upload, lab, commissioner instruction
× RELATED உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி...