தஞ்சையில் கல்லணை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட வலை: நீரில் கலக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு

தஞ்சை:  தஞ்சையில் கல்லணை கால்வாயில் அடித்துவரப்படும் குப்பைகளை தனியாக பிரித்து, எளிமையான முறையில் சுத்தம் செய்வதற்காக கால்வாயின் குறுக்கே பிரம்மாண்ட வலை அமைக்கப்பட்டுள்ளது. விவசாய பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும்போது அடித்துவரப்படும் குப்பைகள் கிளை வாய்க்கால்களில் சிக்கிக்கொள்வதால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு சிலர் நீரில் மூழ்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே குப்பைகளை பிரித்து எளிமையான முறையில் சுத்தம் செய்யவும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், கால்வாயின் குறுக்கே சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மிதவையுடன் கூடிய பிரம்மாண்ட அலுமினிய வலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீண்ட நாட்களின் கோரிக்கைக்கு பின் வலை அமைக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தெடுக்கப்படும் குப்பைகளை அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் வலைகள் அமைக்கப்பட்டால் பெருமளவு உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: