சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,585 ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,25,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,09,585 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,581 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,223 ஆக உள்ளது.

சென்னையில் 60.32% ஆண்களும் 39.68% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(23.08.2020) மட்டும், 12,625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,841

2     மணலி        1,841

3     மாதவரம்        3,740

4     தண்டையார்பேட்டை    9,975

5     ராயபுரம்        11,773  

6     திருவிக நகர்        8,547

7     அம்பத்தூர்        7,219

8     அண்ணா நகர்    12,585  

9     தேனாம்பேட்டை    11,322

10     கோடம்பாக்கம்    12,533

11     வளசரவாக்கம்    6,539

12     ஆலந்தூர்        3,765

13     அடையாறு       8,187

14     பெருங்குடி        3,394

15     சோழிங்கநல்லூர்    2,800

16     இதர மாவட்டம்    1,524.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    260

2     மணலி        152

3     மாதவரம்        620

4     தண்டையார்பேட்டை    780

5     ராயபுரம்        765

6     திருவிக நகர்        950

7     அம்பத்தூர்        1,404

8     அண்ணா நகர்    1,481

9     தேனாம்பேட்டை    858

10     கோடம்பாக்கம்    1,631

11     வளசரவாக்கம்    1,126

12     ஆலந்தூர்        590

13     அடையாறு        1,232

14     பெருங்குடி         567

15     சோழிங்கநல்லூர்    505

16     இதர மாவட்டம்   302 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>