×

போணியாகாததால் பேக்-அப் செய்கிறது இந்தியாவிலிருந்து வெளியேற ஹார்லி டேவிட்சன் திட்டம்?

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. பணக்கார இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற பைக்குகளில் முதன்மை இடம் ஹார்லி டேவிட்சனுக்கு அமெரிக்காவின் அந்தஸ்துக்கு சான்றாக திகழும் இந்த பைக்கின் விலை ரூ.5 லட்சம் தொடங்கி ரூ.50 லட்சம் வரை உள்ளது. இந்த அமெரிக்க நிறுவன பைக்ககளுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார் டிரம்ப். இந்த நிறுவனம், ஹரியானாவில் உள்ள பாவல் என்ற இடத்தில் தொழிற்சாலை அமைத்துள்ளது. உதிரி பாகங்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்கிறது.

கடந்த நிதியாண்டில் 2,500 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதில் 2,100 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டின் 106 பைக்குகள்தான் விற்பனையாகின. இது 87% சரிவு.  ஏற்றுமதி 40 சதவீதம் சரிந்து 226 பைக்குகளாகிவிட்டது. உலக அளவில் 2,10,000 பைக்குகளை விற்ற இந்த நிறுவனத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே, உலக அளவில் இந்த பைக்கிற்கு வரவேற்பு உள்ள 50 சந்தைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், மாடல்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஹார்லி டேவிட்சன் நிர்வாக குழு தலைவர் ஜாக்கன் ஜெய்ட்ஸ் கூறியுள்ளார். இதனால், ஹரியானாவில் உள்ள தனது பைக் அமெம்ப்ளிங் தொழிற்சாலையை மூடிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேற இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags : India ,Harley-Davidson , Pony-backed, back-up, India, Harley Davidson to leave, plan?
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...