×

ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப்

டெல்லி: இந்த ஆண்டு விற்பனை செய்ய உள்ள ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மற்றும் அவற்றின் விலைகளை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரிமியர் ரக பைக் ஆன ஹார்லி டேவிட்சனை எப்படியாவது ஓட்டிவிட மாட்டோமா என்று எங்கும் பைக் பிரியர்கள் ஏராளம் காரணம் எட்டாத உயரத்தில் பல லட்சங்களில் இருக்கும் அதன் விலை பைக் பிரியர்களின் ஏக்கத்தை தணிக்கவும் இந்திய சந்தையை குறிவைத்தும் ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

அதன்படி எஸ்.ஆர்.1200ரோட்ஸ்டார் பைக்கை இன்ஸ்பயர் செய்து எக்ஸ் 400 பைக்கை ரூ.2,29 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. ராயல் என்பீல்ட் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வளவு குறைந்த விலையில் ஹார்லி டேவிட்சன் பைக் அறிமுகம் செய்யப்பட்டது இளைஞர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய சந்தையில் விற்பனை செய்ய உள்ள 10 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மற்றும் அதன் விலைகளை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ள சில மாடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மிக குறைவாக நயிட்ஸ்டர் மாடலும் அதிகபட்ச விலையாக ரோட்லைட் மாடலும் இருக்கிறது. நயிட்ஸ்டர் மாடலின் 3 வெரியன்களும் 13லட்சங்களில் உள்ளது. அதிகபட்சமாக ஸ்ட்ரீட்லேட் ரூ.38.79 லட்சம் ஆகவும் ரோட்லைட் ரூ.41.79 லட்சமாகவும் உள்ளது. இவற்றில் பிரெட்பாய் 114, பிரெட்பாய் 117, ஹெரிடேஜ் 117 மற்றும் பிரேகௌட் 117 ரகங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனைக்கு வர உள்ளதால் பைக் பிரியர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

The post ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப் appeared first on Dinakaran.

Tags : Harley-Davidson ,Hero: Hero Moto Corp ,Delhi ,Hero Moto Corp ,Harley Davidson ,America ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...