×

மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.7,500: கால்டாக்சி தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை: மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூபாய் 7,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. ஏற்கனவே சாலைகளில் இயங்கக்கூடிய அனைத்து வாகனங்களையும் இயக்க தடை விதித்து, ஓட்டுநர்கள் வருமானம் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். தற்போது சில நிபந்தனைகளுடன் வாகனம் இயக்க அரசு அனுமதி அளித்தாலும் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது இல்லை.

எனவே இ-பாஸ் வழங்கும் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஆறு மாதங்களாக வாகனங்கள் இயங்கவில்லை. உடனடியாக அரசு டிசம்பர் வரை சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். நிதி நிறுவனங்கள் வாகன கடனுக்கான இஎம்ஐ தொகைக்கு விதித்துள்ள வட்டியை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட வேண்டும். நிதி நிறுவனங்களிடம் வாங்கிய வாகன கடன் செலுத்த டிசம்பர் வரை அவகாசம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூபாய் 7,500 வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : motor vehicle workers ,Corona , Motor Vehicle Worker, Corona Relief Fund, Rs.7,500, Caltaxi Workers, Demand
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...