×

என்ன கொடுமை சார் இது கட்டிப் பிடிக்கவும் முடியல கிஸ் கொடுக்கவும் முடியல: அமெரிக்காவில் 60% பேருக்கு மன அழுத்தம்

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல மேற்கத்திய நாடுகளில் கட்டிப்பிடிக்காமல், கன்னத்தோடு கன்னம் உரசாமல், கிஸ் அடிக்காமல் யாரும் யாரிடமும் குசலம் விசாரிக்க மாட்டார்கள். நாம் எப்படி முன்பெல்லாம் கைகூப்பி வரவேற்று விசாரித்தோமோ, பின்னாளில் மேற்கத்திய பேஷனாக கைகுலுக்கினோமோ,ஏன் இப்போது மேல் தட்டு மக்கள் கட்டிப்பிடித்து நலம் விசாரிப்பதும் பேஷனாகி விட்டது. மேற்கத்திய நாட்டு மக்களுக்கு கட்டிப்பிடித்து தான் யாராக இருந்தாலும் வரவேற்பு துவங்கும். வந்தாலும் வந்தது கொரோனா.

தொட்டால் தொற்றிவிடுவேன் என்று பயமுறுத்தி, கட்டிப்பிடி விசாரிப்புகளுக்கு அறவே முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால், கட்டிப்பிடிக்காமல், கைகுலுக்காமல், கிஸ் அடிக்காமல் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் மக்களால் இருக்க முடியவில்லை. இருந்தும், கொரோனா பீதியால் மிகவும் கஷ்டப்பட்டு தவிர்த்து வருகின்றனர். சமீபத்தில், இது ப ற்றி அமெரிக்காவி்ல் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நிபுணர் டிப்பானி பீல்டு தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் சர்வே எடுத்தனர்.

அதில், வெளியான சில அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:
* அமெரிக்காவில் தலா ஐந்து பேரில் ஒருவர் தனியாளாக வசிக்கின்றார். இவர்கள் தான் கட்டிப்புடி...விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு போவது வரை உறவினராகட்டும், நண்பராகட்டும், காதலியாகட்டும் யாராக இருந்தாலும் கட்டிப்பிடித்து, நெருக்கமானவராக இருப்பின் கிஸ் அடித்தும் தான் வரவேற்பது வழக்கம். அது தவிர்க்கப்பட்டதால் மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
* சர்வே எடுத்த 5000 பேரில் 60 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர். இவர்கள் தான் அதிக அளவு மன அழுத்தம் ஏற்பட்டு பாதித்துள்ளனர்.
* திருமணமானவர்கள், திருமணம் செய்யாமல் லிவ் இன் தம்பதியாக இருப்பவர்கள், 33 சதவீதம் பேர், எங்களுக்குள் கட்டிப்பிடிப்பது உட்பட வழக்கமான எல்லா உணர்வுபூர்வமான செயல்பாடுகளும் நடக்கின்றன; கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றனர்.
* 37 சதவீதம் பேர், நாங்கள் ஒரே வீட்டில் வசித்தாலும், வைரஸ் பீதியால் எக்காரணம் கொண்டும் தொட்டுக்கூட பேசுவதில்லை  என்று கூறினர்.
* 26 சதவீதம் பேர் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதால், மன அழுத்தம் பாதிப்பு எதுவுமில்லை.

* கட்டிப் பிடிப்பதால் இதயத்துடிப்பு சீராகும்
‘கட்டிப்பிடிப்பதால் உடலில் ரத்தத்தில் காரடிசோல் அளவு குறையாது; ஆக்சிடோசின் அளவு அதிகமானாலும் சீராகி விடும். அதுபோல, இதயத்துடிப்பை சீராக்க உதவும்; சில மன நல பாதிப்புகள் இதன் மூலம் சீராவதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்’ என்று இண்டியானா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மோலி ரோசர்பெர்க் கூறினார்.

* கைகழுவி விட்டு கட்டிப்பிடி...
‘கட்டிப்பிடிப்பதால் கொரோனா வராது; கைகளை இருவரும் நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு கட்டிப்பிடிக்கலாம்; அதன் பின் மீண்டும் சோப்பு போட்டு கழுவி விடலாம்’ என்று லண்டன் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்கரெட்ஹோசி கூறினார். அதே சமயம், கொரோனா என்பது சாதாரண வைரஸ் அல்ல; நாம் அலட்சியமாக இருக்க கூடாது; கட்டிப்பிடிக்கும் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்; வைரஸ் விபரீதத்துக்கு வழி விடக்கூடாது’ என்று லண்டன் பொதுசுகாதார அமை ப்பின் தலைவர் ஹே மான் கூறினார்.

Tags : United States , What a horrible sir,, can't kiss, America, 60% of people, depressed
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!