×

தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இருப்பினும், கோயில்களில் மட்டும் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக ஜூலை 1ம் தேதி கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்கள், சர்ச், மசூதிகள்  திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, மாநகராட்சி எல்லை பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லை பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்களும் இன்று திறக்கப்படுகிறது. 3 ஆயிரம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி இன்று திறப்பு: தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உள்ளது. இந்த பயிற்சி பள்ளிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக செயல்படவில்லை. இந்த பயிற்சி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, இன்று முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பாட்டு வருகிறது.

* என்ன செய்யலாம்?
கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் நிலை அறிய தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த  பின்பு தான் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம்  செய்து பின், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு நுழைய வேண்டும். சுவாமி சிலைகளை தொடுதல் கூடாது. பக்தர்கள் தேங்காய், பூ, பழம்  ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்க கூடாது.

* யாருக்கு அனுமதி இல்லை
மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு வருவோர் மாஸ்க் அணிய வேண்டும். உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை  நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது.

Tags : corporations ,Shrines ,Tamil Nadu , Tamil Nadu, 15 corporations, places of worship, today, opening
× RELATED இந்த நிதி ஆண்டுக்குள் 7,030 புது...