×

சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,469 பேர் சிகிச்சை!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,06,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 92,128 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,248 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,720 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 58.82% ஆண்களும் 41.18% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(06.08.2020) மட்டும், 11,595 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,361
2     மணலி        1,677
3     மாதவரம்        2,970
4     தண்டையார்பேட்டை    9,007
5     ராயபுரம்        10,598    
6     திருவிக நகர்        7,383    
7     அம்பத்தூர்        5,001  
8     அண்ணா நகர்    10,605     
9     தேனாம்பேட்டை    10,093  
10     கோடம்பாக்கம்    10,702    
11     வளசரவாக்கம்    5,065   
12     ஆலந்தூர்        2,927
13     அடையாறு        6,590    
14     பெருங்குடி        2,616     
15     சோழிங்கநல்லூர்    2,140    
16     இதர மாவட்டம்    1,393

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    402
2     மணலி        77
3     மாதவரம்        540
4     தண்டையார்பேட்டை    605
5     ராயபுரம்        797
6     திருவிக நகர்        917
7     அம்பத்தூர்        1,469
8     அண்ணா நகர்    1,260
9     தேனாம்பேட்டை    834
10     கோடம்பாக்கம்    1,326
11     வளசரவாக்கம்    859
12     ஆலந்தூர்        520
13     அடையாறு        917
14     பெருங்குடி         494
15     சோழிங்கநல்லூர்    470
16     இதர மாவட்டம்    233 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,zone ,Chennai ,Ambattur , Chennai, Corona, zone, district, Treatment
× RELATED கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல்...