சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,04,027 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 89,969 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,856 ஆக குறைந்துள்ளது. சென்னையில் 58.99% ஆண்களும் 41.01% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!
1 திருவொற்றியூர் 3282
2 மணலி 1654
3 மாதவரம் 2876
4 தண்டையார்பேட்டை 8865
5 ராயபுரம் 10,404
6 திருவிக நகர் 7206
7 அம்பத்தூர் 4836
8 அண்ணா நகர் 10,432
9 தேனாம்பேட்டை 9997
10 கோடம்பாக்கம் 10,519
11 வளசரவாக்கம் 4855
12 ஆலந்தூர் 2798
13 அடையாறு 6336
14 பெருங்குடி 2523
15 சோழிங்கநல்லூர் 2022
16 இதர மாவட்டம் 1,364
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 423
2 மணலி 89
3 மாதவரம் 568
4 தண்டையார்பேட்டை 645
5 ராயபுரம் 796
6 திருவிக நகர் 952
7 அம்பத்தூர் 1401
8 அண்ணா நகர் 1198
9 தேனாம்பேட்டை 804
10 கோடம்பாக்கம் 1349
11 வளசரவாக்கம் 900
12 ஆலந்தூர் 520
13 அடையாறு 1012
14 பெருங்குடி 484
15 சோழிங்கநல்லூர் 482
16 இதர மாவட்டம் 233