×

மழைநீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் திருமழிசை சந்தை...!! காய்கறி மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி அழுகுவதால் வியாபாரிகள் வேதனை!!

சென்னை:  சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசையில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு சந்தையானது திருமழிசை சந்தைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மார்க்கெட் முழுவதும் குளம்போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட அனைத்து காய்களிகளும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதனை விளைவித்த விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் தேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வியாபாரிகளும் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, திருமழிசை சந்தையில் காய்களைகளை பாதுக்காக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகள் மழைநீரால் பாதிக்கப்பட்டு அழுகுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சாட்டாகும். மேலும், திருமழிசை மார்கெட்டால் தினசரி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல வியாபாரிகள் அங்கு கடைகளை திறக்க முன்வராத நிலையும் நீடித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கோயம்பேடு சந்தையை திறக்கவேண்டுமென்று காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Thirumalisai ,flood forest ,Merchants ,Traders , Thirumalisai market, flood ,rain water ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...