×

முதல்வரை விமர்சித்த கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு: பரபரப்பு புகார்

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென்று தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, பாலிவுட்டில் நெப்போடிசம் குறித்து கடுமையான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனவத் நாள்
தோறும் பரபரப்பான கருத்துகள் தெரிவித்து, பாலிவுட் பிரபலங்கள்  மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். தற்போது மனாலியில் தங்கியுள்ள அவரது வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும், 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதற்காகவே சிலர் இப்படி செய்துள்ளதாகவும் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, கங்கனா ரனவத் அளித்துள்ள பேட்டி:
அன்றிரவு 11.30 மணியளவில் எனது அறையில் இருந்தேன். அப்போது அறைக்கு நேரெதிரில் 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. 8 விநாடி இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்தன. வீட்டு காம்பவுண்டு சுவருக்கு பின்னால் நின்று யாரோ சுட்டு இருக்கின்றனர். அதற்கு பின்புறம் காடு இருக்கிறது. எனவே, அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கலாம். இது எனக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மகன் குறித்து கருத்து தெரிவித்து இருந்தேன். அதற்கான மிரட்டல் இது. இனி பேசாதே என்பதற்கான எச்சரிக்கை.

இதற்கு முன் இங்கு இதுபோல் சத்தம் கேட்டதில்லை. இதற்கு சாட்சியாக நான் இருக்கிறேன். சத்தம் கேட்டவுடன் செக்யூரிட்டியிடம் சொல்லி பார்க்க சொன்னேன். அவர் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. உள்ளூரை சேர்ந்த யாரையாவது 7 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த மிரட்டல் ஏற்பாட்டை அவர்கள் செய்திருக்கலாம். அந்த அரசியல்வாதி பற்றி கருத்து சொன்னவுடன், இனி மும்பையில் உங்களுக்கு பிரச்னை ஏற்படுத்துவார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் இப்போது மும்பையில் இல்லை என்பதால், மனாலியில் இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்கள். சுஷாந்த் சிங் கூட இப்படித்தான் மிரட்டப்பட்டு பயந்திருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்.இவ்வாறு கங்கனா கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குலு போலீசார் கங்கனா ரனவத் வீட்டுக்கு அருகில் சோதனை நடத்தினர். தற்போது அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : First criticized, Kangana home, shooting, complaint
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...