×

தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: தனிமனித இடைவெளியை கடைபிடித்து வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை: ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்

சென்னை:தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்கள், திடல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.  ஆனால், கொரோனா பாதிப்பால் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளில் தனிமனித இடைவெளியில் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பிறகு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டியில் ‘ஊரடங்கு அமலில் இருப்பதால் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி கொரோனா நெருக்கடியில் இருந்து தேசம் மீண்டு வர வேண்டும் என்று ஒவ்வொரு இஸ்லாமியரும் பிராத்தனை செய்தனர்.

தொடரந்து குர்பானி கொடுத்தனர். இதுமட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர்.  மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.    Tags : Bakreed ,home ,Muslims ,Tamil Nadu ,celebrations , Tamil Nadu, Bakreed Celebration, Personal Gap, Special Prayer for Muslims, Poor, Ordinary People, Qurbani
× RELATED தமிழகம் முழுவதும்...