×

சமாஜ்வாடி மாஜி தலைவர்களில் ஒருவர் மாநிலங்களவை எம்பிஅமர்சிங் காலமானார்

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார். அவருக்கு வயது 64.  கடந்த 2011-ம் ஆண்டு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட அமர்சிங், ஆரோக்கியமாகவே  செயல்பட்டு வந்தார். மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில்,  சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.  சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டு வந்த அமர்சிங், முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அகிலேஷ் யாதவின் வருகைக்குப் பிறகு விலகிக் கொண்டார்.

முலாயம் சிங் - அகிலேஷ் யாதவ் இடையே மோதல் ஏற்படவும் இவர் காரணமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.  தொடர் சர்ச்சைகளால் 2016-ம் ஆண்டு அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். எனினும், சமாஜ்வாடி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தவுடன், அமர்சிங்குக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கி மீண்டும் அவரை  அரசியலில் ஈடுபட வைத்தது. கடந்த 1956-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி  பிறந்த அமர்சிங்குக்கு பங்கஜ குமாரி சிங் என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.இவருடைய மறைவுக்கு பல்ேவறு  கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : leaders ,Samajwadi Party ,statesmen , Former Samajwadi Party leader, one of the statesmen, MP, passed away
× RELATED விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அகிலேஷ் யாதவ் உறுதி