×

மருத்துவ குணம் நிறைந்த பெர்சிமன் பழ சீசன் துவங்கியது

குன்னூர் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் நிறைந்த  ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம்  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி,ஆர ஞ்சு,பீச்,பிளம்ஸ்,எலுமிச்சை,லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ  மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை பெர்சிமன் பழ மரங்களும் உள்ளன. இம்மரங்களில் தற்போது சீசன் துவங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.  

மேலும் வயிற்றில் உள்ள கொடிய பூச்சிகளை வெளியேற்றும் தன்மை உள்ளது. சர்க்கரை நோய்  மற்றும் ரத்த  அழுத்தத்ைத கட்டுப்படுத்த கூடிய மருத்துவக் குணம் கொண்டது, பொதுவாக, ஜூன் மாதம் துவங்கி ஆகஸ்ட்,செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் துவங்கி நடைபெறும். ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டு இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. இப்பழமானது குன்னூர் தட்ப வெப்ப நிலையில் மட்டும் வளரக்கூடியது. தோட்டக்கலைப்பண்ணைகளில் ஒரிரு தினங்களில் பெர்சிமன் பழம் விற்பனை செய்யப்பட உள்ளது.


Tags : season ,Persimmon , medicinal properties, Persimmon fruit ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...