×

அகில இந்திய வக்கீல்கள் தகுதி தேர்வு தள்ளிவைப்பு: பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதி நடக்க இருந்த அகில இந்திய வக்கீல்கள் தகுதி தேர்வை தள்ளிவைத்து அகில இந்திய பார்கவுன்சில் அறிவித்துள்ளது. சட்டப் படிப்பை முடித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்த பிறகு  அகில இந்திய பார்கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதி தேர்வு அகில இந்திய அளவில் ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அகில இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விண்ணப்பம் செய்யும் தேதி ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் பார்கவுன்சில் அறிவித்தள்ளது.

Tags : Bar Council Notice ,India ,Lawyers , All India Lawyers, Qualification Examination, Postponement, Bar Council
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!