×

சென்னையில் பிடிபட்ட 40 கிலோ தங்க கடத்தலிலும் தொடர்பா?: ஸ்வப்னா கும்பலைச் சுற்றிவரும் சந்தேக ரேகைகள்..!!

திருவனந்தபுரம்: சென்னையில் பிடிபட்ட 40 கிலோ கடத்தல் தங்கம் தொடர்பான வழக்கில் கேரள தங்கராணி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் கடந்த ஜனவரியில் 40 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டதில் 2 வெளிநாட்டு பெண்கள் உட்பட 6 பேர் சிக்கினர். இந்நிலையில், இந்த வழக்கில் கேரள தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கேரளாவில் ஸ்வப்னா மற்றும் கூட்டாளிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதனிடையே சென்னையில் பிடிபட்ட 40 கிலோ கடத்தல் தங்கத்திற்கும் ஸ்வப்னா மற்றும் அவரது கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் சென்னையில் நடந்த வழக்கு விசாரணை தகவல்களை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவிடம் என்.ஐ.ஏ. கேட்டுள்ளது.

ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் தாங்கள் கடத்தும் தங்கத்தை மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் மிக அதிகமாக விற்பனை செய்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் அதிகளவில் விற்றதாக தெரியவந்துள்ளது. இதனால் சென்னையில் நடந்துள்ள 40 கிலோ தங்கக்கடத்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது.

Tags : gang ,Chennai ,Swapna , Swapna,gold smuggling
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...