×

காற்று மாசுபாடு காரணமாக 5.2 ஆண்டுகள் குறையும் இந்தியர்களின் ஆயுட்காலம்...: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைவதாக ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிக்காகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் காலப்போக்கில் காற்றின் தரத்தில் துகள் மாசுபாடு கூர்மையாக அதிகரித்தது. 1998 முதல், சராசரி ஆண்டு துகள் மாசுபாடு 42 சதவீதம் அதிகரித்துள்ளது, அந்த ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் குறைந்தன. இந்தியாவின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத காற்று மாசுபாட்டுக்கு ஆளாகின்றனர், வட இந்தியாவில் வசிக்கும் 24.8 கோடி மக்கள் இதே மாசு அளவு தொடர்ந்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை  இழக்க நேரிடும். லக்னோ மிக உயர்ந்த மாசுபாட்டைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது, உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலை விட 11 மடங்கு மாசு அதிகம்.

லக்னோவில் வசிப்பவர்கள் இதே மாசுபாடு தொடர்ந்தால் 10.3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க மாசு குறைக்கப்பட்டால் டெல்லியில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் 9.4 ஆண்டுகள் அதிகம் வாழலாம். மாசுபாடு இந்தியாவின் தேசிய தரத்தை பூர்த்தி செய்தால் 6.5 ஆண்டுகள் அதிகம்  வாழலாம். பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகமாக 7 ஆண்டுகளும், அரியானா மாநில மக்கள் 8 ஆண்டுகளும் அதிகமாக வாழலாம். இந்தியாவின் 140 கோடி  மக்கள் உலக சுகாதார அமைப்பின் சராசரி காற்று மாசுபாடு வழிகாட்டுதலை மீறிய பகுதிகளில் வாழ்கின்றனர். இந்தியாவின் சொந்த சாராசரி காற்றின் தரத்தை மீறிய பகுதிகளில் 84 சதவீதம் பேர் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்ட நான்கு நாடுகளான வங்காள தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் மிகவும் மாசுபட்டுள்ளன. வட இந்தியா தெற்காசியாவின் மிகவும் மாசுபட்ட பகுதியாக வளர்ந்து வருகிறது, என கூறப்பட்டுள்ளது.


Tags : Indians ,Indian , Air Pollution, Indians, Life expectancy , Study
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...