×

கந்தசஷ்டி விவகாரம் கருப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு குண்டாஸ்

சென்னை: இந்து கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த நிர்வாகிகளான வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49), ராமாபுரத்தை சேர்ந்த சுரேந்திர நடராஜன்,  ஓட்டேரியை சேர்ந்த கேமராமேன் சோமசுந்தரம் மற்றும் மறைமலை நகரை சேர்ந்த வீடியோ எடிட்டர் குகன்  ஆகிய  4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜனை நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அதே வழக்கில் வேளச்சேரி செந்தில்வாசன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : affair ,crowd ,Kandasashti , Kandasashti affair, black crowd, to one, Kundas
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...