×

கலிக்கம்பட்டியில் கொசுக்களின் உற்பத்தி மையமான கிணறு: துர்நாற்றத்தின் பிடியில் முஸ்லீம் தெரு மக்கள்

சின்னாளபட்டி: கலிக்கம்பட்டியில் பகுதியில் உள்ள கிணற்றுக்குள் கழிவுநீர் தேங்கியும், தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால், கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி, நிலம், நீர், காற்று என அனைத்து பாதிக்கப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டி 2வது வார்டு முஸ்லீம் தெரு பகுதியிலிருந்து கழிவுநீர் ஆணைவிழுந்தான் ஓடை வரை குழாய் மற்றும் வாய்க்கால் மூலம் செல்கிறது. செல்லும் வழியில் தனியார் கிணற்று அருகே உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கிணற்றுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதி கொசுக்கள் உற்பத்தி கூடமாக மாறி வருகிறது. இதுகுறித்து முஸ்லீம் தெரு மக்கள் கூறுகையில், கழிவுநீர் முழுவதும் கிணற்றுக்குள் பல மாதங்களாக தொடர்ந்து தேங்கி வருகிறது. இதனால் பொறுக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியால், இரவு மட்டுமில்லாமல், பகல் நேரங்களில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. குழந்தைகள், முதியர்வர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாழாகி வருகிறது. எனவே கழிவுநீர் முறையாக செல்ல வாய்க்காலை தூர்வாரவும், கிணற்றுப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். …

The post கலிக்கம்பட்டியில் கொசுக்களின் உற்பத்தி மையமான கிணறு: துர்நாற்றத்தின் பிடியில் முஸ்லீம் தெரு மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kalikimbati ,SINNANAPATTI ,Kalikkambati ,Kalikambardi ,Dinakaran ,
× RELATED சின்னாளபட்டி பகுதி மயானத்திற்குள்...