×

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா: தமிழகத்தில் கடைசி கட்ட தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்...!!!

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கடைசி கட்ட தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 31ம் தேதி வரை பல்வேறு கட்டமாக  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பிறகு ஊரடங்கு விதிகளின் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் பொது போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதேநேரம், ஜூலை 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 5,12,19 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கடைசி கட்ட தளர்வில்லா ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறு நாள் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில்  இருக்கும். இந்த ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மருத்துவத்தை தவிர எந்த வித அத்தியாவசிய தேவைக்கும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசின் உத்தரவை மீறி வெளியே சென்றால் அவர்கள் மீது எந்த நிபந்தனையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் என  காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரையில் போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 198 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில்  ஈடுபட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளனர். இதன்படி கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல  இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,districts ,Chennai ,Corona ,Rudra Thandavam , Corona playing Rudra Thandavam in districts other than Chennai: Curfew enforcement without last phase relaxation in Tamil Nadu ... !!!
× RELATED ஆழ்ந்த காற்றழுத்தம் நீடிப்பு இன்று...