×

குட்டையில் மீன்பிடிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பாட்டி, 2 பேரன்கள் பலி: செங்கல்பட்டு அருகே சோகம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி வண்டியம்மாள் (65). இவர்களது மகள் முருகவேணி. இவருக்கு சந்தோஷ் (13), நித்திஷ் (10) ஆகிய மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை வண்டியம்மாள், அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றார். அவருடன், பேரன்கள் 2 பேரும் சென்றனர். சிறுவர்கள்  தண்ணீரில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது திடீரென  நீரில் மூழ்கினர். இதை பார்த்ததும், வண்டியம்மாள் அவர்களை தண்ணீரில் குதித்தார். ஆனால், அவரும் சிறுவர்களுடன் நீரில் மூழ்கி, உயிருக்கு போராடினார்.

அவரது கூச்சல் கேட்டு, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்வேணி (65) என்ற மூதாட்டி, தண்ணீரில் இறங்கி 3 பேரையும் காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். அவர்களது அலறல் சத்தம்கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து 4 பேரையும் மீட்டனர். தகவலறிந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 4 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 சிறுவர்கள், வண்டியம்மாள் ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர் என கூறினர். கிருஷ்ணவேணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  மீன்பிடிக்க சென்றபோது பாட்டி, 2 பேரன்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம், செங்குன்றம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : grandchildren ,Chengalpattu ,pond , Puddle, submerged grandmother, 2 grandchildren, killed, bricklayed
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்