×

கொரோனாவால் அதிரடி முடிவு; தண்டனை கைதிகள் 1200 பேரை விடுதலை செய்ய அரசு திட்டம்: பட்டியல் தயார்

சேலம்: கொரோனாவால் தமிழக சிறைகளில் இருக்கும் தண்டனை கைதிகள் 1200 பேர் விடுதலையாக உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சுமார் 1200 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளின்போது சிறையில் இருக்கும் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இறுதியாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சுமார் 1800க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி 10 ஆண்டுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், 60 வயதை தாண்டியவர்கள், உடல்நலம்  பாதிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200 கைதிகள் வரை விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் தீவிரவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள், வரதட்சணை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், கள்ளநோட்டு வழக்கு மற்றும் விஷ சாராய வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலையாக மாட்டார்கள்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா பரவி வரும்நிலையில் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் அல்லது விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக சிறைகளில் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கொடூர வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு விடுதலை கிடையாது. தற்ேபாது எடுக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் சுமார் 1200 கைதிகள் வரை விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது,’’ என்றனர்.

Tags : convicts ,Government ,Corona , Corona, convicted prisoners, release, government
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...