×

50 கி.மீ. வேகத்தில் வீசப்போகும் சூறாவளி காற்று : கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செம மழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளையும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலத்தீவு, கேரளா, லட்சத்தீவு கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.ஜூலை 23ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, திருப்பூர் மாவட்டம் குந்தலம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Tags : districts ,Nilgiris ,Coimbatore , 50 km Speed, hurricane, wind, cove, Nilgiris, thunder, lightning, sleet, chance
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில்...