×

6,555 பேருக்கு வேலை வாய்ப்பு; முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ரூ.5,137 கோடி முதலீட்டில் 16 புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 16 புதிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. கடந்த மே மாதம் தொழில்துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான்,  பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்  தொடர்ச்சியாக, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கடந்த 20-ம் தேதி 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய முதலீட்டு திட்டங்களை துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில், 16 புதிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு செய்வதால் 6,555 பேருக்கு வேலை  வாய்ப்பு உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த 4 மாதங்களில் 41 நிறுவனங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதில் ரூ.30,664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

கோவிட் - 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி,  முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.  

இத்திட்டங்களின் விவரங்கள் பின் வருமாறு:

* அதானி நிறுவனம் சிறுசேரியில் ரூ.2,300 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜே நிறுவனம் காஞ்சிபுரம் வல்லத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 800 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ஏர்ஃபுளோ எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் வல்லம் வடகலில் ரூ.320 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* பிரின்ஸ்டன் டிஜிட்டல் நிறுவனம் சிறுசேரியில் ரூ.750 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* டாப் அணில் மார்கெட்டிங்க நிறுவனம் திண்டுக்கல்லில் ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* BBL-FTA நிறுவனம் தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

*Visteon நிறுவனம் மறைமலை நகரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ATG tyres நிறுவனம் கங்கை கொண்டான் தொழில் பூங்காவில் 250 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 400 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ப்ளத்தி நிறுவனம் சென்னையில் ரூ.22 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 20 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ஸவையர் பே சென்னையில் ரூ.23 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 30 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* பிட் வைஸ் நிறுவனம் கோவையில் ரூ.21 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* ராடஸ் டிஜிட்டல் நிறுவனம் சென்னையில் ரூ.21 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Tags : Palanisamy ,Signing ,companies , Employment for 6,555 people; 5,137 crore investment agreement signed with 16 new companies in presence of Chief Minister Palanisamy .. !!!
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது