×

இந்திய கம்யூ. தலைமை அலுவலகம் பற்றி அவதூறு எதிரொலி!: தமிழகம் முழுவதும் பல இடங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் குறித்து அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லம் முன்பு அக்கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

சிதம்பரத்தில் தபால் தலைமை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பற்றி அவதூறாக பேசிய வலதுசார் இயக்கங்களை சேர்ந்த நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதன் தோழமை கட்சிகளான திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர். இதேபோன்று ஓசூர், மதுரை மாவட்டம் திருமங்கலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Leftists ,Tamil Nadu ,head office ,places , Indian Comm, Leftists , Tamil Nadu !!!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...