ஸ்பெயினில் நடைபெற்ற லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், கடைசி லீக் ஆட்டத்தில் அலாவெஸ் அணிக்கு எதிராக 2 கோல் அடித்த பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸி, நடப்பு சீசனில் மொத்தம் 25 கோல் அடித்து கோல்டன் பூட் விருதை தட்டிச் சென்றார். லா லிகா தொடரில் அவர் இந்த விருதை 7வது முறையாக பெறுவது குறிப்பிடத்தக்கது. ரியல் மாட்ரிட் அணியின் பென்சிமா (21 கோல்) 2வது இடத்தையும், வில்லாரியல் வீரர் ஜெரார்டு மொரீனோ (18 கோல்) 3வது இடத்தையும், பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரெஸ் 16 கோல் அடித்து 4வது இடத்தையும் பிடித்தனர்.
