×

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் ஆபரணத் தங்கத்தின் விலை: கிராமிற்கு ரூ.4,709 அதிகரித்து சவரன் ரூ.37,672-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,709-க்கும், சவரன் ரூ. 37,672-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.59.70-க்கு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.59,700-க்கு விற்பணை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60 குறைந்து ரூ.37,560க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.7.50 காசுகள் குறைந்து ரூ.4,695-க்கு விற்பனையானது.

சென்னையில் நேற்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.57.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.57,100 ஆக உள்ளது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

Tags : Jewelery gold ,continues ,fluctuate, Rs 4,709 per gram, razor sells , Rs 37,672
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...