×

ஆம்பூரில் ஊரடங்கின் போது வெளியே வந்ததாக கூறி வாகனம் பறித்த விவகாரத்தில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஊரடங்கின் போது வெளியே வந்ததாக கூறி போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 12ம் தேதி தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்த போது ஆம்பூரில் வெளியே வந்த இளைஞர் முகிலனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து வாகனத்தை தரும்படி முகிலன் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீசார் வாகனத்தை தர மறுத்ததால் மனமுடைந்த முகிலன் மண்ணென்னையை  ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதையடுத்து, 90 சதவீதம் தீக்காயங்களுடன் இளைஞர் முகிலன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். உயிரிழந்த முகிலனுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க சென்ற போது தான் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு திருப்பி தரவில்லை என்பது புகார். இதனைப்போலவே, சென்னை தாம்பரத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரின் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் வேதனை அடைந்த அவர் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Youth killed, vehicle, hijacking, case
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்...