×

15 ஆயிரம் மருத்துவ தபால்கள் பட்டுவாடா

சென்னை: அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை சேவை முக்கிய பங்காற்றியுள்ளது.அதன்படி, தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் 15 ஆயிரம் மருத்துவ தபால்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பிபிஇ கிட், மாஸ்க், சானிடைசர், முக்கியமான மருந்துகள், மாத மாத்திரைகள் என ஏராளமான மருத்துவ தபால்கள் ஊரடங்கு காலத்தில் அஞ்சல் துறையில் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு பிபிஇ கிட் பதிவு செய்யப்பட்டு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதி வரை இந்த சேவை பயன்படுத்தப்படுள்ளது. மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கும் சென்னை மற்றும் இதர பிற மாவட்டங்களில் இருந்தும் மருந்து உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : 15 thousand, medical mails, delivery
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...