×

தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சந்தீப் நாயர் திடீர் வாக்குமூலம்...! ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் கைதாவது உறுதி!!!

திருவனந்தபுரம்:  தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சந்தீப் நாயரின் திடீர் வாக்குமூலத்தால், தங்கராணி ஸ்வப்னாவுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் 4 முறை சந்தித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்கக்கடத்தல் தொடர்பாக ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சந்தீப் நாயரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஸ்வப்னா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் ஆகியோருக்கிடையில் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், அதிகாரி சிவசங்கரனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகளை இதுவரை சந்தித்ததில்லை என அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் சிவசங்கரன் அளித்த வாக்குமூலம் பொய் என, தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சந்தீப் நாயர் கூறியுள்ளார். அதாவது ஸ்வப்னாவும், சிவசங்கரனும் இதுவரை 4 முறை சந்தித்து பேசியுள்ளதாக சந்தீப் வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்வப்னா சுரேஷின் அடுக்குமாடி வீட்டில் வைத்தே இந்த சந்திப்பு நடத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஸ்வப்னாவின் தங்கக்கடத்தல் விவரம் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தெரியும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில் இந்த வாக்குமூலம் அமைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரீத் என்பவரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஸ்வப்னாதான் இந்த தங்கக்கடத்தல் விஷயத்தில் முக்கிய நபராக செய்யப்பட்டுள்ளார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடத்தலின்மூலம் கிடைத்த பணத்தில், பெரும் பங்கை ஸ்வப்னாவே எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர், அதில் தூதரக அதிகாரிக்கும் பங்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரங்க அதிகாரிக்கும், ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், விரைவில் இருவரையும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : confession ,Sivasankaran ,Sandeep Nair ,IAS , Sudden confession of Sandeep Nair arrested in gold smuggling case ...! IAS officer Sivasankaran arrested
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து