×

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் பரவினால், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் : ராகுல் காந்தி கவலை

டெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக முதல் முறையாக இன்று ஒரே நாளில் 34,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதன்படி, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,03,832 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதிலிருந்தே மத்திய அரசு உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து ட்விட்டரில் விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில்,கடந்த செவ்வாய்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரத்தில் 10 லட்சத்தை எட்டும என்று எச்சரித்திருந்தார். அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், மத்திய அரசை விமர்சித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் “ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தால், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சம் பேர் நாட்டில் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.மேலும், செவ்வாய்கிழமை ராகுல் காந்தி தான் ட்வீட் செய்திருந்த இந்தி ட்விட்டர் போஸ்டையும் இன்றைய பதிவில் இணைத்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த வாரத்தில் இந்தியா கொரோனா தொற்றில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Rahul Gandhi ,India , India, Corona, Virus, Infection, August 10, 20 Lakhs, Rahul Gandhi, Concern
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...