×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரிப்பு: முதல்வர் இன்று ஆலோசனை


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. விஷச் சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், சுரேஷ், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, ராமு, டேவிட், கந்தன், வடிவு, சுப்பிரமணி ஆகியோர் உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம் அர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறது.

விழுப்புரத்தில் இருந்து சென்ற 4 சிறப்பு மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி இயக்குநர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 12 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி மற்றும் மதுவிலக்குப் போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு உதவ சென்னை சிபிசிஐடி அதிகாரிகள் குழுவினர் விரைந்தனர். வழக்கு குறித்து தீர விசாரித்து தக்க மேல்நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால், சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைகிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுகுட்டியை கைது செய்து, 200 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சட்டப் பேரவையின் இன்றைய அலுவலகள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரிப்பு: முதல்வர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi ,Chief Minister ,Kallakurichi ,Suresh ,Praveen ,Shekhar ,Manikandan ,Tanakodi ,Arumugam ,Indra ,Krishnamoorthy ,Narayanasamy ,Ramu ,David ,Kandan ,Vadivu ,Subramani ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய...