×

மருந்து கண்டுபிடிப்பில் உலக நாடுகள் போட்டா போட்டி நீயா... நானா... பார்க்கலாம்! வல்லரசுகள் முதல் புள்ளபூச்சிகள் வரை மும்முரம்

புதுடெல்லி: கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இனி மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே மனித குலத்தை காப்பாற்ற முடியும் என்ற கட்டத்திற்கு உலக நாடுகள் வந்துவிட்டன. இதனால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் வல்லரசுகள் முதல் புள்ளபூச்சி நாடுகள் வரை வரிந்து கட்டி களமிறங்கி உள்ளன. சுமார் 165 நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில், விலங்குகள், ஆய்வக பரிசோதனை தாண்டி மனிதனிடம் மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் இறுதி கட்டத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் எட்டி உள்ளன. ஒருபக்கம் அமெரிக்கா, மறுபக்கம் இங்கிலாந்து, இன்னொருபுறம் ரஷ்யா… இவர்களோடு கொரோனாவை பரப்பி விட்ட சீனா என ஆளாளுக்கு யார் முதலில் மருந்தை வெளியிடுவது என்பதில் போட்டா போட்டி போட்டுக் கொண்டுள்ளன.

இந்த உலகமகா ரேசில் முக்கியமான கட்டத்தில் உள்ள நாடுகளில் சில வருமாறு:
இங்கிலாந்து: இந்நாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏஇசட்டி122 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது, மனிதர்களிடம் பரிசோதிப்பதில் இறுதி கட்டமான 3வது கட்டத்தை முடித்து விட்டது. 8,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதனிடம் பரிசோதித்ததில் முதல் கட்ட முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும், மருத்துவ சோதனைகள் வெற்றி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு தினங்களில் ஆக்ஸ்போர்டு மருந்து பற்றி பரபரப்பான செய்தி நிச்சயம் வரும். இப்போது இருப்பதில் இந்த மருந்து தான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.

சீனா: , சீன அரசின் சினோபார்ம் கண்டுபிடித்துள்ள ‘சினோவாக்’ மார்ச் மாதத்திலேயே மனித பரிசோதனையில் 3வது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவித்துள்ளன.
ரஷ்யா: ரஷ்யாவின் ஸ்சினோவ் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்து, உலகிலேயே முதல் முறையாக ஆய்வக பரிசோதனையை நிறைவு செய்தது. இந்த மருந்து மனிதனிடம் பரிசோதிப்பதில் முதல் கட்டத்தில் இருக்கிறது.
இந்தியா: இந்தியாவில் பாரத் பயோடெக்-ஐசிஎம்ஆர் இணைந்து கோவாக்சின் என்ற மருந்தை தயாரித்துள்ளன. மற்றொரு நிறுவனமும் மருந்து கண்டுபிடித்துள்ளது. இவற்றை மனிதனிடம் பரிசோதிக்கும் முதல் கட்டத்தை தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன.
அமெரிக்கா: அமெரிக்காவில் ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா, அஸ்ட்ராஜெனிகா மற்றும் நோவாவாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் 4 மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. மார்டனா தனது முதல் கட்ட மனித சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மருந்தை கண்டுபிடித்து 2020 இறுதிக்கும் 10 கோடி மருந்தை சப்ளை செய்ய நோவாவாக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ரூ.12,000 கோடி நிதி தந்துள்ளது. - இவற்றில் எந்த நாடு முதலில் மருந்தை வெற்றிகரமாக்கி, உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் அதை வெளியிடுகிறதோ அந்த நாடு, கொரோனாவுக்கு பிறகான உலகின் மாபெரும் பணக்கார நாடாகப் போவது உறுதி. இதுவரை இழந்த பொருளாதாரத்தை மீட்பதோடு, உலகின் புதிய ஆதிக்க சக்தியாகவும் மாற முடியும். அந்த இடத்தை பிடிக்கத்தான் இவ்வளவு போட்டா போட்டியும் நடக்கிறது. இதில் ஜெயிக்கப் போவது யாரோ?

* விலை எவ்வளவு இருக்கும்?
லேசான கொரோனா பாதிப்புக்காக பயன்படுத்த இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.4,800. இப்படியிருக்க கொரோனாவுக்கான மருந்தின் விலை நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், அதன் விலையை கணிக்க முடியாது என்றும், எந்த நாடு மருந்தை கண்டுபிடித்தாலும் அதை மலிவான விலையில் அனைத்து நாடுகளும் வாங்கக் கூடிய அளவில் இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

* உயிர்விட துணிந்த 20 சீனர்கள்
மனிதனிடம் மருந்தை பரிசோதிக்க அந்தந்த நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி தேவை. ஆனால், சீனா கண்டுபிடித்த ‘சினோவாக்’கிற்கு அந்த அனுமதி தரப்படுவதற்கு முன்பே மனிதர்களிடம் சோதிக்க ஆரம்பித்து விட்டது. ஏப்ரலில் அனுமதி கிடைக்க, மார்ச் மாதமே 30 தன்னார்வலர்களுக்கு மருந்தை செலுத்தி ஆய்வு செய்துள்ளது. இந்த 20 பேரும் இந்த உலகிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்வதாக கூறியுள்ளனர்.

Tags : world countries ,Nia ,Nana , n the invention of medicine, the nations of the world, the pota competition, from the superpowers, to the moths, are busy
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...