×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,104 கர்ப்பிணிகள் குணமடைந்தனர்: 491 பேர் மருத்துவமனையில் சிகிச்சை; அமைச்சர் தகவல்

சென்னை: எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் நிலையத்தை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 கர்ப்பிணிகள் கடந்த 3 மாதங்களில் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களில் 374 பேர் பிரசவத்துக்கு பிறகு நல்ல முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் தினம் 60 பேருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதில் நிறைய பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கும் சோதனை செய்யப்படுகிறது. அதில் 39 பேருக்கு நியூமராலஜி பாசிட்டிவ் இருக்கிறது. அந்த பிறந்த குழந்தையும், தாயையும் நெகட்டிவ் வந்த பிறகு தான் டிஜ்சார்ஜ் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பட்ட 1,606 கர்ப்பிணிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,104 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்னும் 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 12 சதவீதம் பேர் பாசிட்டிவ் வருகிறது. அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சை, சாலிட்டரி, பிஜிசி வேக்சின் முதியவர்களுக்கு கொடுப்பது என அனைத்தும் சோதனை அடிப்படையில் நடக்கிறது. அதில் பிளாஸ்மா சிகிச்சை தான் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

* இறந்தவரின் உறவினரை கண்டுபிடிக்காத அவலம்
பெரம்பூரில் 73 வயது முதியவர் கொரோனா பாசிட்டிவ் ஆன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் மறுநாளே உயிரிழந்த நிலையில் 10 நாட்களாக அனாதை பிணமாக மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதில் அவர்கள் குடும்பத்திற்கு தகவல் கொடுப்பதில் எந்த இடத்தில் தவறுகள் நடந்துள்ளது என்று அமைச்சரிடம் கேட்டதற்கு, ‘‘இதைப்பற்றி தெரியவில்லை. பின்னர்தான் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதை விசாரித்து பின்னர் கூறுகிறேன்’’ என்றார்.


Tags : women , Corona, 1,104 pregnant, recovered, 491 hospitalized, treated; Minister
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...