×

இளையான்குடியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு: அச்சத்தில் மக்கள்

இளையான்குடி: இளையான்குடி பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகார சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஹவுத் அம்பலம் தெரு மற்றும் காதர்பிச்சை தெருக்களில் தனியார் இடங்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் கொசுத்தொல்லையால் இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாங்க முடியவில்லை அவதிக்குள்ளாகினர்.

கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் தனியார் இடங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் சிறுபான்மை நகர் தலைவர் அம்பலம் ராவுத்தர் நெயினார் கூறுகையில், ‘கவுத் அம்பலம் தெரு, காதர் பிச்சை தெருக்களில் தொற்று நோய் காரணமாக 2 பேர் கடந்த சில நாள்களுக்கு முன் இறந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Ilayankudi , Ilayankudi, sewerage, health disorders
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...