×

நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று மதுராந்தகத்தில் முக்கிய சாலைகளுக்கு சீல்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில், நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக கொரோனா பரவுவதால் 2 முக்கிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் முருகன் கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு, சுந்தர் ராம் நகர், பார்த்தசாரதி குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் 8 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 18 பேருக்கு நேற்று ஒரோ நாளில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அனைவரும் செங்கல்பட்டு, சென்னை ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவலால், மக்கள் மிகுந்த அதிர்ச்சியந்துள்ளனர். இதுவரை 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மதுராந்தகம் நகராட்சியில் உள்ள தேரடி தெரு, ஹாஸ்பிடல் சாலை ஆகியவற்றுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அடுத்த 14 நாட்கள் வரை செயல்படுத்தப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். இதற்கிடையில், ஒரே மருத்துவ குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட வணிகர் சங்க பேரவை, வாலாஜாபாத் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, எஸ்ஐ ராஜா ஆகியோர், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளை வழங்கினர்.

மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் பொருட்கள் வழங்க கூடது என அறிவுறுத்தினர். தொடர்ந்து வியாபாரிக்குளும், பொதுமக்கக்குளும் கபசுர குடிநீர், முக  கவசங்கள் வழங்கப்பட்டது. இதில் வாலாஜாபாத் வியாபார சங்க தலைவர் அரிக்குமார், துணை தலைவர் லோகநாதன், செயலாளர் அப்துல், பொருளாளர் பிரகாஷ், துணை செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : roads ,Madurantakam , Brewery, main roads, sealed
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...