×

பிரேசில் அதிபரை தொடர்ந்து பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி!

பொலிவியா: பிரேசில் அதிபரை தொடர்ந்து பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியா நாட்டில் இடைக்கால அதிபர் ஜினைன் அன்ஸ் தனக்கு தொற்று பாதித்துள்ளதை உறுதி செய்துள்ளார். தமது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதனால் அவர் 14 நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிவியா இடைக்கால அதிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இடைக்கால அதிபர் ஜினைன் அன்ஸ் தெரிவித்ததாவது, நெருக்கடியான நேரத்தில் பொலிவியா மக்கள் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

எனது அலுவலகத்தில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தற்போது எனக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளேன் என தெரிவித்தார். பொலிவியா நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மரிஹா ஈடிரோஹாவும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனா பாதிக்கு ஆளாவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : president ,Bolivia ,Brazil ,Jeanine Anez Tests , Bolivia President Jeanine Anez Tests Positive For Coronavirus
× RELATED போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு...