×

பவர்கிரிட் இயக்குநராக முக்காரம் பொறுப்பேற்பு

சென்னை: மத்திய எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் பவர் கிரிட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக (நிதி) எம்.தாஜ் முக்காரம் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் பவர்கிரிட்டின் நிர்வாக இயக்குநராக (நிதி) பதவி வகித்தவர். எரிசக்தி துறையில் 35 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். நீண்ட கால நிதி திட்டமிடல், நிதி ஒத்துழைப்பு, டிபிஆர்/ திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு, ஸ்மார்ட் கிரிட், ஸ்மார்ட் கிரிட் நகரங்களின் உள்கட்டமைப்பு, ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்கள், மின்சார வாகன சார்ஜிங் போன்ற எரிசக்தி திறன் சார்ந்த திட்டங்களுக்கான நிதி திட்டமிடல் உட்பட பல்வேறு துறைகளில் அனுபவமிக்கவர்.எம்பிஏ பட்டம் பெற்ற இவர், கடந்த 1984ல் என்டிபிசி நிறுவனத்தின் நிர்வாக பயிற்றுனராக (நிதி) தனது பணியை தொடங்கி, கடந்த 1991ம் ஆண்டு பவர்கிரிட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

Tags : Mukaram ,PowerGrid , As the Director of PowerGrid, Mukaram, is responsible
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு..!!