×

கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!: சென்னை அருகே கிராம மக்களின் போர்கொடியால் பரபரப்பு!!!

சென்னை: கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் சென்னை அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறம் இருக்க கொரோனா நோய் தொற்றினால் இருப்பவரின் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சென்னையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செங்குன்றம் அருகே உள்ள காவாங்கரை சுடுகாட்டில் தான் இந்த எதிர்ப்பு கிளம்பியது.

கொரோனாவால் இறந்தவரை அவரது பகுதியில் புதைக்காமல் தங்களது இடத்தில் புதைப்பது ஏன்? என்பது ஊர்மக்களின் கேள்வியாகும். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சென்னை மாநகராட்சி ஊழியர்கள், இனிமேல் இவ்வாறு நடக்காது என்று உறுதி அளித்தனர். அதன் பின்னரே கொரோனாவால் இறந்தவரின் உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே திண்டுக்கல்லில் உள்ள முகாமில் கொரோனா நோயாளிகள் தீண்ட தகாதவர்கள் போல் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. முறையான குடிநீர், உணவு, கழிப்பறை என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என்பது நோயாளிகளின் குற்றச்சாட்டு.

இதன் காரணமாக நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக அவர்கள் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனாவால் தனிமைப்படுத்தப்படுவோருக்கு முகாம்களில் உரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் பல ஊர்களில் இதுபோன்ற வேதனை குரல்கள் அவ்வப்போது எதிரொலித்தபடியே உள்ளது.Tags : death protests ,Coroner ,Burial , Coroner's death protests against burial
× RELATED மத்திய அரசால் நிறுத்தி...