×

திருமழிசை சந்தையில் தனி மனித இடைவெளியை கண்காணிக்கும் ஐரிஸ் கருவி அறிமுகம் : ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடினால் ஒலி எழுப்பும் வகையில் உருவாக்கம்!!

சென்னை : திருமழிசை காய்கறி சந்தையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக தனி மனித இடைவெளியை கண்காணிக்கும் ஐரிஸ் என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தை கொரோனா மையமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அங்கு செயல்பட்ட கடைகள், தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கும் வியாபாரிகள் அதிகளவில் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காய்கறி கடைகளை தனி மனித இடைவெளியை பின்பற்றி வியாபாரம் நடப்பதை உறுதி செய்ய ஐரிஸ் என்ற கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கடைகள் முன்பு நிற்பவர்கள் 2.5 மீட்டர் இடைவெளியை கடைப் பிடிக்காவிட்டால் ஒலி எழுப்பும் வகையில் இந்த ஐரிஸ் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமழிசை காய்கறி சந்தையில் முதல்கட்டமாக 3 கடைகளில் ஐரிஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரில் மக்கள் அதிகம் கூடும் வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் ஐரிஸ் கருவியை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.  


Tags : Track Individual Human Gaps , Trisha market, individual space, iris instrument, image, sound, creation
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...