×

கொரோனாவை கட்டுப்படுத்த 19 வகை மூலிகையுடன் தயாரிக்கப்பட்ட மைசூர்பாக்: கோவை பலகார கடையில் புதிய முயற்சி!!!

கோவை: கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அவரவர் தாங்கள் சார்ந்த துறைகளில் மருந்து கண்டுபிடிக்க தொடங்கிவிட்டனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை தொட்டிபாளையத்தை சேர்ந்த பலகாரக்கடை உரிமையாளர் ஒருவர், மூலிகை மைசூர்பாக் தயாரித்துள்ளார். 19 வகை மூலிகைகள் வைத்து இதனை தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.

தம் முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் கற்றுக்கொடுத்த  சில வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸை தடுக்க மைசூர்பாக் தயாரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 4 துண்டுகள் மைசூர்பாக் சாப்பிட்டால் கொரோனா நோய் அண்டாது என்பது அவரது கருத்து. இதனை கொரோனா நோயாளிகள் முதலில் சாப்பிடும் போது கசப்பு தெரியும் எனவும், உடல் வலிமை அதிகரிப்பதன் காரணத்தால் பின்னர் அந்த மைசூர்பாக் கசப்பு தன்மையை இயக்கும் எனவும், இதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அரசு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தால் இலவசமாக கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : grocery store ,Coimbatore ,initiative sweets store , Corona, 19 Herbal, Mysore Bagh, Coimbatore Grocery Store
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...